சத்குரு - யோகா & ஆன்மிகம்

ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.9
134ஆ கருத்துகள்
5மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

சத்குரு & ஈஷாவின் அர்ப்பணிப்புகளைப் பெறும் விதமாக அதிகாரப்பூர்வ Sadhguru Appல் இணையுங்கள்! சத்குருவின் சமீபத்திய கட்டுரைகள், ஒலி பதிவேற்றங்கள் மற்றும் ஆன்மீகம், வெற்றி, உறவுகள், ஆரோக்கியம் என பல்வேறு தலைப்புகளில் புதிய வீடியோக்களைப் பெற்று பலன்பெறுங்கள். யோகாவுக்கு புதியவர் எனில், யோகா (உப-யோகா) மற்றும் குறிப்புகளுடன் தியானங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
சத்குரு & ஈஷா நிகழ்வுகளைப் பற்றிய புதிய அப்டேட்களைப் பெறுங்கள். ஈஷாவிற்கு வரும் பார்வையாளர்களுக்காக, நாங்கள் ஒரு லைவ் மேப்பை இணைத்துள்ளோம். ஒரு க்ளிக் செய்தாலே சரியான பாதைகளைக் கண்டறிந்து மையத்திற்கு வந்து சேர்ந்திட முடியும்.
சத்குரு
சத்குரு வாசகங்கள் - தினசரி உங்கள் உள்நிலையில் உற்சாகமும் உத்வேகமும் வழங்கும் ஆன்மீக வாசகங்கள்
தினசரி வீடியோக்கள் - உங்கள் வாழ்க்கையை ஆன்மீகத்துடன் தொடங்க தினசரி ஞானத் துளிகள்
சத்குரு வீடியோக்கள், கட்டுரைகள் மற்றும் ஒலிப்பதிவுகள் - சமீபத்திய வீடியோக்கள் மற்றும் பலவிதமான சுவாரஸ்ய தலைப்புகளில் கட்டுரைகளுடன், நீங்கள் எங்கிருந்தாலும் சத்குருவின் ஞானத்தைக் கேட்பதற்கான ஒலிப் பதிவேற்றங்கள்.
இலவச யோகக் கருவிகள்
இந்த எளிதான 5 நிமிட பயிற்சிகள் ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி, அன்பு மற்றும் வெற்றியை சிறப்பாக்கிக் கொள்வதற்கும், நவீன மயமான வாழ்க்கையின் பரபரப்பான சூழலைச் சமாளிப்பதற்கும், வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் உங்கள் முழு திறனை உணர்ந்திடவும் உதவும் சக்திவாய்ந்த கருவிகள்.
ஆரோக்கியத்திற்கான யோகா - உங்கள் மூட்டு இணைப்புகள் மற்றும் தசைகளில் உள்ள சக்தி முடிச்சுகளை இயக்குவதற்கான ஒரு எளிய பயிற்சி.
நோயெதிர்ப்பு சக்திக்கான யோகா - உங்கள் நோயெதிர்ப்பு சக்தியையும் நுரையீரல் திறனையும் மேம்படுத்த உதவும் பயிற்சிகள், இந்த கொரோனா காலங்களில் இன்றியமையாதவை.
வெற்றிக்கான யோகா - பரிணாம வளர்ச்சியில், முதுகெலும்பு செங்குத்தாக நின்றது ஒரு மகத்தான சாத்தியத்திற்கு காரணமாகியுள்ளது. இந்த எளிய பயிற்சி முதுகெலும்பை ஆரோக்கியமாகவும் உயிரோட்டமாகவும் வைத்திருக்கிறது. எனவே இயற்கையாகவே வெற்றிக்கு வழிவகுக்கிறது.
ஒட்டுமொத்த நல்வாழ்விற்கான யோகா - யோக நமஸ்காரம் என்பது உடல், இடுப்பு பகுதியை இயக்கி முதுகெலும்புடன் சேர்ந்த தசைகளை வலுப்படுத்தக்கூடிய ஒரு எளிய & சக்திவாய்ந்த பயிற்சி; இதனால் முதுமையால் வரும் முதுகெலும்பு பிரச்சனைகளைத் தடுக்க முடியும்.
அமைதிக்கான யோகா - நாடி சுத்தி பயிற்சி பிராண சக்திகள் நகரும் பாதைகளான நாடிகளை சுத்தம் செய்கிறது. இதன்மூலம் சமநிலையான உடல் மற்றும் மனம் & நல்வாழ்வு கிடைக்கிறது.
ஆனந்தத்திற்கான யோகா - நாத யோகா – ஒலி அதிர்வுகளால் செய்யப்படும் யோகா – உள்நிலை ஆனந்தத்தை இயற்கையான வழியில் உருவாக்கக்க உதவுகிறது.
உள்நிலை அறிதலுக்கான யோகா - ஷாம்பவி முத்ரா என்பது, உங்கள் புரிதலை மேம்படுத்து, கிரகிக்கும் தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஒரு எளிய பயிற்சி.
அன்புக்கான யோகா - நரம்பு முடிச்சுகள் முடியும் பகுதியான உணர்ச்சிமிக்க உள்ளங்கைகளை நமஸ்கார நிலையில் ஒன்றாகக் குவிக்கும்போது, உங்களுக்குள் அன்பை உருவாக்கும் விதமாக உங்களது இரசாயனத்தை நீங்கள் மாற்ற முடியும்.
குறிப்புகளுடன் தியானங்கள்
ஈஷா கிரியா - சத்குரு வடிவமைத்துள்ள குறிப்புகளுடன் வழிகாட்டும் இலவச தியானத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
சத்குரு ப்ரசன்ஸ் நேரம் - தினமும் மாலை 6:20 மணிக்கு சத்குருவின் அருள் இருப்பை உணர்ந்திட வழிகாட்டுதலுடன் கூடிய 7 நிமிட உச்சாடனம்
சித் சக்தி தியானங்கள் - மனதின் சக்தியைப் பயன்படுத்தி, ஒருவர் வாழ்க்கையில் தான் விரும்புவதை உருவாக்குவது 'சித் சக்தி' என்று அழைக்கப்படுகிறது. இந்த நான்கு சித் சக்தி வழிகாட்டு தியானங்கள், உங்கள் வாழ்க்கையில் அன்பு, ஆரோக்கியம், அமைதி மற்றும் வெற்றியை அடைந்திட உதவும்:
அன்பிற்கான சித் சக்தி தியானம்
ஆரோக்கியத்திற்கான சித் சக்தி தியானம்
அமைதிக்கான சித் சக்தி தியானம்
வெற்றிக்கு சித் சக்தி தியானம்
ஈஷா யோகா நிகழ்ச்சிகள்
ஈஷா யோகா ஆன்லைன் (பண்டைய யோக அறிவியலிலிருந்து பெற்ற சக்திவாய்ந்த கருவிகளை வழங்கும் ஏழு 90 நிமிட வகுப்புகள்; வாழ்க்கையை அனுபவிக்கும் விதத்தை மாற்றியமைக்கும் திறன் கொண்ட ஒரு நிகழ்ச்சி.)
ஈஷா மையத்தை பார்வையிட வாருங்கள்
வரவிருக்கும் ஈஷா யோகா நிகழ்ச்சிகள் & அருகில் நிகழும் நிகழ்வுகளைக் கண்டறியுங்கள்
ஈஷா யோக மையம் மற்றும் இங்குள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களை மேலும் அறியுங்கள்
ஈஷாவின் அவுட்ரீச் சமூக நலத் திட்டங்களை மேலும் அறியுங்கள்
சத்குரு எக்ஸ்க்ளூசிவ் - சத்குருவுடன் ஆன்மீக மறைஞானத்தை ஆராயும் வீடியோ தளம்
இசை & வால்பேப்பர்கள்
சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசை & உச்சாடனங்கள்
ஆதியோகி வால்பேப்பர் இலவச பதிவிறக்கம்
WEB: isha.sadhguru.org
FACEBOOK: facebook.com/sadhguru
FEEDBACK: apps@ishafoundation.org
புதுப்பிக்கப்பட்டது:
10 ஏப்., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 4 வகையான தரவு
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், நிதித் தகவல், மேலும் 3 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.9
132ஆ கருத்துகள்
sakthi vel
21 ஏப்ரல், 2025
சிறப்பு👍
இது உதவிகரமாக இருந்ததா?
Jayapritha Chandrasekaran
6 மார்ச், 2025
Arumai
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
வி ஜய்
6 டிசம்பர், 2024
Super app 👌🏾👌👌👌🏾👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏👏👏👏
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

Minor Bug Fixes